பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்ட மாணவி

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
470Shares
470Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது ஆசிரியையை கொலை செய்துவிடுவதாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Desiree Zio(18) என்ற மாணவி River Ridge High School- இல் பயின்று வருகிறார். இவரது பள்ளி ஆசிரியை அவதூறாக நடத்தியதால் கோபம் கொண்ட மாணவி, தனது பேஸ்புக் பக்கத்தில், ஆசிரியையின் பெயரை குறிப்பிட்டு அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவி மீது பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். பள்ளி நிர்வாகம் கூறியதாவது, மாணவர்களை போன்றே பள்ளி ஆசிரியர்கள் மீதும் நாங்கள் அதிக அக்கறையோடு உள்ளோம்.

மாணவியின் இந்த செயல் தவறானது ஆகும், இதனால் அவர் கண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்