குப்பை ஏற்றி வந்த டிரக் மீது பயங்கரமாக மோதிய பயணிகள் இரயில்..ஒருவர் பலி: ஒரு நபர் படுகாயம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் குப்பை ஏற்றி வந்த டிரக் மீது பயணிகள் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Virginia நகரத்தில் உள்ள Charlottesville பகுதியில் குப்பைகள் ஏற்றி வந்த டிரக் பாதையை கடக்க முயன்ற போது, அதிவேமாக வந்த பயணிகள் இரயில் அந்த டிரக்கின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் டிரக் ஓட்டி வந்த டிரைவர் இறந்துவிட்டதாகவும், ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி அந்த பயணிகள் இரயிலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பயணம் செய்ததாகவும், ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயிலில் பயணம் செய்த யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை, டிரக் மீது பயங்கரமாக மோதியதால் தூக்கி வீசப்பட்டதில், ஒருவர் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தை அறிந்து அப்பகுதிக்கு மருத்துவ குழுவினர் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers