உறவினரால் 3 ஆண்டுகள் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி: பெற்ற தாயே உதவியது அம்பலம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் உறவினரால் மூன்று ஆண்டுகள் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் பணத்துக்காக தாயே அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிவுனிட் கவுண்டியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் அவரின் உறவினரான அல்டானா (35) என்பவரும் உடன் தங்கியுள்ளார்.

சிறுமிக்கு 10 வயதாக இருக்கும் போதிலிருந்தே அல்டானா அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார்.

இதை சிறுமி தனது தாயிடம் சொன்ன போதும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

அதாவது, தனது வீட்டு வாடகை கொடுப்பது போன்ற பண உதவியை அல்டானா செய்து வந்ததால் அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் சிறுமியின் தாய் இருந்துள்ளார்.

தற்போது வேறு ஒரு குடும்ப நண்பர் மூலம் இது வெளியில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அல்டானாவை பொலிசார் கைது செய்து அவர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறுமியின் தாயிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்