எனக்கு கவலை இல்லை.. உங்களுக்கு? சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் மனைவியின் உடை

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்ற டிரம்ப் மனைவி அணிந்திருந்த Coat உடையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் நடவடிக்கையை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொண்டு வந்தார்.

அதற்கு ஐ.நா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் அந்த நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள குழந்தைகள் முகாமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் அணிந்திருந்த Coat உடையில் ‘I really don't care, do u?' (உண்மையிலேயே எனக்கு கவலையில்லை, உங்களுக்கு?) என எழுதப்பட்டிருந்தது. அவர் தன் காருக்கு திரும்பும் போதும் இதே உடை அணிந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்தில் பலரும் மெலனியாவின் இந்த Coat வாசகத்தை விமர்சிக்க தொடங்கினர்.

தற்போது மெலனியா டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘அது வெறும் Coat தான். அதில் உள்ள கருத்துக்கு எந்த உள் அர்த்தமும் கற்பிக்க வேண்டாம். முக்கியமாக அவர் குழந்தைகள் முகாமிற்கு சென்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த உடையின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.

REUTERS

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers