தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் விபரீதம்: புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் மலை உச்சியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட புதுமண தம்பதிகள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் திரூர் பகுதியில் பிரபல மருத்துவர்களான விஸ்வனாதன் மற்றும் சுஹாசினி தம்பதிகளின் மகனான விஷ்ணு(29) மற்றும் அவரது மனைவி மீனாட்சி(29) என்பவர்களே தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் மரணமடைந்துள்ளனர்.

இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் குறித்த சம்பவத்தை விஷ்ணுவின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

செவ்வாய் அன்று மரணத்தை ஏற்படுத்திய குறித்த சம்பவம் நடந்ததாக தெரியப்படுத்தியுள்ளனர்.

தேனிலவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டிரக்கிங் சென்ற இருவரும் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.

ஆனால் இருவரில் ஒருவரது கால் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும், அதில் காப்பாற்ற சென்ற இன்னொருவரும் விபத்தில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த விஷ்ணுவும் மீனாட்சியும் காதலித்து பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சடலத்தில் நின்று கைப்பற்றிய வாகன ஓட்டுனர் உரிமத்தில் இருந்து இருவரது முகவரிகளை கைப்பற்றிய பொலிசார் அதன்மூலமே உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்