அமெரிக்காவில் முன்னாள் நாஸ்கர் கார் பந்தய நட்சத்திரம் குடும்பத்துடன் சென்ற தனிவிமானம் தரையில் மோதி எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
44 வயதான முன்னாள் கார் பந்தய சூப்பர்ஸ்டார் டேல் எர்ன்ஹார்ட் ஜேஆர், அவரது மனைவி மற்றும் மகள் பயணித்த தனிவிமானம் டென்னஸி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், விமானத்தில் பயணித்த எர்ன்ஹாரட் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும். விபத்தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எர்ன்ஹார்ட், சிகிச்சை பின்னர் வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் எரிந்து சம்பலான நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
VIDEO: EARNHARDT PLANE CRASH: Dale Earnhardt Jr. and his family were involved in a plane crash in eastern Tennessee. His sister confirms Dale, Amy & Isla along with his two pilots have been taken to the hospital for further evaluation. pic.twitter.com/KnUGtowmFF
— NBC Charlotte (@wcnc) August 15, 2019
எனினும், தற்போது வரை விமானம் விபத்திற்குள்ளான காரணம் வெளியாகவில்லை. விபத்து குறித்து ஆய்வு செய்ய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின்அதிகாரிகள் இரண்டு புலனாய்வாளர்களை அனுப்பியுள்ளனர்.