தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்...X-ray-வில் கண்டுபிடித்த மருத்துவர்கள்! கண்கலங்கிய இளம் பெண்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கத்தில் கனவு என்று நினைத்து நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியதால், அவர் மிகுந்த வேதனையடைந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் San Diego பகுதியைச் சேர்ந்தவர் Jenna Evans. 29 வயதான இவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது.

(Image: Facebook)

இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு வீட்டில் வழக்கம் போல் தூங்கியுள்ளார். அப்போது இவர் சற்று மோசமாக கனவு கண்டதாகவும்(கெட்டவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தன்னுடைய காதலன் மோதிரத்தை விழுங்கும் படி கூறியுள்ளார்), அப்போது நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியது போன்றும் கனவு கண்டுள்ளார்.

ஆனால் மறுநாள் காலை எழுந்த போது, அவருடைய கையில் மோதிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உண்மையிலே மோதிரத்தை விழுங்கிவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளார். அதன் பின் இது குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார்.

(Image: Facebook)

முதலில் இதைக் கேட்டு அவர்கள் சிரித்துள்ளனர். அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றோம். மோதிரம் என் வயிற்றில் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

அப்போது மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுக்க வேண்டும் என்று கூறினர். அதன் பின் மோதிரம் குடலில் சிக்கியிருப்பதை கண்டவுடன், எண்டோஸ்கோப்பி மூலம் எடுத்துவிடலாம், எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர்.

(Image: Facebook)

இருப்பினும் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், என்று கையெழுத்து வாங்கினர். அப்போது நான் அழுதுவிட்டேன். இதையடுத்து நல்ல முறையில் மோதிரம் வெளியில் எடுக்கப்பட்டது.

மோதிரத்தை நான் முதலில் என்னுடைய காதலன் மற்றும் வருங்கால கணவர் பாபியிடம் கேட்டேன், முதலில் இல்லை என்றார், அதன் பின் அவர் கொடுத்தார். இதை நான் மீண்டும் விழுங்கமாட்டேன் என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் விழுங்கிய மோதிரம், வைர மோதிரம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

(Image: Facebook)

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers