டிக் டாக் மூலம் பழக்கமான தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 11 வயது சிறுமியின் நிலை என்ன? பொலிசார் தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் டிக் டாக் மூலம் பழக்கமான தோழியுடன் 11 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மெம்பீஸ் நகரை சேர்ந்தவர் லகீரியா மெக்நீல் (11). இவர் சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில் பின்னர் மாயமானார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் டிக் டிக் மூலம் தன்னுடன் நட்பான தோழியுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறியது தெரியவந்தது.

மேலும் அவர்களுடன் இன்னொரு ஆண் மற்றும் பெண் இருப்பதும் உறுதியானது.

இந்நிலையில் தற்போது சிறுமி லகீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி லகீரியா கடத்தப்பட்டாரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் யார் மற்றும் இது தொடர்பிலான இன்ன பிற விபரங்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

MPD

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்