முக்கிய புள்ளியை சாய்த்த ஈரான்.... பழி தீர்க்க அமெரிக்கா! திடீர் தாக்குதலின் முக்கிய பின்னணி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் ஒப்பந்தக்காரரின் மரணம் தான், ஈரான் புரட்சிகர தளபதியை அமெரிக்கா கொன்றதற்கு வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கடந்த ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதியான சுவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொன்றது.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ஈரான் கடந்த மாதம் நடத்திய தாக்குதல் ஒன்றில் அமெரிக்காவின் ஒப்பந்தகாரர் ஒருவரின் மரணம் தான் சுலைமானியின் மரணத்திற்கு வழி வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் ஒப்பந்தக்காரரான Nawres Hamid என்ற 33 வயது நபர் கடந்த டிசம்பர் மாதம் ஈரான் Kirkuk பகுதியின் வெளியில் இருக்கும் அமெரிக்க தளத்தில் நடத்திய தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

(Family photo)

ஈராக்கில் பிறந்த இவர் அமெரிக்காவின் Sacramento-வில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு இரட்டை குடியுரிமை பெற்ற இவர், அங்கிருக்கும் அமெரிக்க தளத்தில் மொழி பெயர்பாளராக இருந்துள்ளார்.

அப்போது நடத்திய தாக்குதலிலே இவர் பரிதாபமாக இறந்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய ஒப்பந்ததாரின் மரணம் தான், டிரம்பிற்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதுவே ஈரானின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியின் மரணத்திற்கு வழி வகுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவருடம் ஒப்பந்தம் வைத்துக் கொண்ட Valiant நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில், Nawres Hamid மரணத்தால் மிகுந்த கவலை தெரிவிப்பதாகவும், உறுதியான நபராக இருந்தாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...