இளம்பெண்ணின் உடலை பதப்படுத்துவதற்கு தயாரான இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள்: திடீரென நடந்த அதிரவைத்த சம்பவம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
865Shares

உயிரிழந்த பெண் ஒருவரின் உடலை பதப்படுத்துவதற்காக இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள் தயாரான நிலையில், திடீரென அந்த இளம்பெண் கண் விழித்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

மிச்சிகனைச் சேர்ந்த Timesha Beauchamp (20), சற்று மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட இளம்பெண்.

Timesha ஞாயிற்றுக்கிழமை காலை பேச்சு மூச்சின்றி கிடந்ததால், பெற்றோர் மருத்துவ உதவிக்குழுவினரை அழைக்க, அவர்கள் வந்து Timeshaவை பரிசோதித்துவிட்டு, உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சைகள் கொடுத்து அவரை எழுப்ப முயன்றும் அவர் எழாததால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Timeshaவின் உடல் இறுதிச்சடங்கு மையத்திற்கு கொண்டு செல்லப்பட, இறுதிச்சடங்கு மைய ஊழியர்கள் அவரது உடலை பதப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

உடலை பதப்படுத்துவதற்கு முன், உடலிலுள்ள இரத்தம் முழுவதையும் வெளியேற்ற வேண்டும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் ஒரு ஊழியர்.

அப்போது திடீரென Timesha கண்களைத் திறக்க, அதிர்ச்சியடைந்திருக்கிறார் அந்த ஊழியர்.

மீண்டும் மருத்துவ உதவிகுழுவினர் அழைக்கப்பட, அவர்கள் வந்து Timeshaவை மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்கள்.

இதற்கிடையில், அவரை கவனித்த பொலிசார், Timesha அசைவதையும் அவருக்கு சுவாசம் இருப்பதையும் கண்டு மருத்துவ உதவிக் குழுவினருக்கு தகவலளிக்க, அவர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளால் அப்படிப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படுமேயன்றி வேறொன்றுமில்லை என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்