போலி கடவுச்சீட்டுடன் விமானத்தில் தப்ப முயன்ற தமிழர் வெளிநாட்டில் கைது

Report Print Arbin Arbin in அமெரிக்கா

போலி கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு தப்ப முயன்ற அமெரிக்க வாழ் தமிழரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் தமிழரான துரைகந்தன் முருகன் (41) என்பவர் மீது சிறுமியை வன்கொடுமைக்கு இரையாக்க முயன்றதாக நியூ ஜெர்சி மாகாணத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவை விட்டு தப்புவதற்காக, சிகாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு முருகன் சென்றுள்ளார்.

வழக்கமான சோதனைக்காக, எல்விஸ் டயாஸ் என்பவர் பெயரிலான இந்திய கடவுச்சீட்டையும், பயண அனுமதி அட்டையையும் அதிகாரிகளிடம் அளித்துள்ளார்.

ஆனால், அவரது உடைமைகளை பரிசோதித்தபோது, முருகன் பெயருக்குரிய ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன.

மட்டுமின்றி, மொபைல் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடத்தப்பட்டதில், அவர் பெயரில் பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காட்டியது.

இதையடுத்து, அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் முருகன் என்றும், உடல்நலமின்றி இருக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக, நண்பரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி அமெரிக்காவை விட்டு செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

திங்களன்று நடந்த இச்சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு, நியூ ஜெர்சிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்