முதல்முறையாக அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்!

Report Print Ragavan Ragavan in அமெரிக்கா
96Shares

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பிரித்தானியாவில் சமீபத்தில் பரவிவரும் புதிய வகைக் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.1.7 எனும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் முதல் வழக்கை இன்று நாங்கள் கொலராடோவில் கண்டுபிடித்துள்ளோம்" என்று அம்மாகாணத்தின் ஆளுநர் ஜாரெட் பொலிஸ் ட்வீட் செய்துள்ளார்.

ஜாரெட் பொலிஸ் தனது அலுவலகம் மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளிடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை இணைத்துள்ளார். அதில், பாதிக்கப்பட்டுள்ள நபர் 20 வயதுள்ள ஆண் என்றும், அவர் தற்போது எல்பர்ட் கவுண்டியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக அவர் சமீபத்தில் எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஏற்கெனெவே பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளும் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவர் மிக நெருக்கமாக தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், மேலும் தொடர்பு தடமறிதல் மூலம் பிற சாத்தியமான நிகழ்வுகளை அடையாளம் காண அதிகாரிகள் செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொலராடோவில் பதிவாகியுள்ள இந்த வழக்கு தான் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட புதிய வகை வைரஸின் முதல் அறியப்பட்ட தொற்று என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஆனால், வட அமெரிக்க கண்டத்தில், கடந்த வாரத்திலேயே கனடாவில் 2 தொற்றுகள் பதிப்பிவாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிறுவனமான ECDCயின் படி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்ற பல நாடுகளில் ஏற்கனவே 3,000-க்கும் மேற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

அதேபோல், தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் மற்றொரு மாறுபாட்டின் 300-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே வைரஸின் 2 தொற்றுகள் பிரித்தானியாவிலும், ஒரு தொற்று பின்லாந்திலும் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இவை மூன்று தொற்றுகளும் தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்