இளம்பெண்ணைக் கொன்று வயிற்றைக் கிழித்து குழந்தையை திருடிய பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
225Shares

அமெரிக்காவில் இளம்பெண்ணைக் கொன்று, அவரது வயிற்றைக் கீறி, கர்ப்பத்திலிருந்த குழந்தையை திருடிய பெண்ணுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Lisa Montgomery (43) என்ற பெண் தான் கர்ப்பமடையாதததால், கர்ப்பிணியான Bobbie Jo Stinnett (23) என்ற கர்ப்பிணிப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரது வயிற்றைக் கீறி, அவரது கருவிலிருந்த குழந்தையை திருடிக்கொண்டார்.

திருடிய குழந்தையை தன் வீட்டுக்கு கொண்டு சென்று தன் குழந்தைபோல் காட்டிக்கொண்ட Lisaவை பின்னர் பொலிசார் கைது செய்தார்கள்.

அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு Bobbieயின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. Victoria Jo Stinnett என்னும் அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது.

இந்நிலையில், இன்று Lisaவுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உங்களுக்கு கடைசி ஆசை ஏதாவது உள்ளதா என்ற கேள்விக்கு, இல்லை என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார் Lisa.

1953ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் மற்றும் ஒரே பெண் Lisaதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்