கொழும்பில் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றம்!!

Report Print Vethu Vethu in காலநிலை

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நிலவும் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, கட்டுநாயக்க மற்றும் கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் சாதாரண அளவை விட 3 மடங்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

அதேபோன்று மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை பகுதிகளில் பகல் வேளையில் அதிகளவான வெப்ப நிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வு நடவடிக்கையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிற்பகல் நேரங்களில் வழமையான வெப்ப நிலையை விடவும் 2 செல்சியல்ஸ் பாகை வெப்பநிலை, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பகல் நேரங்களில் சாதாரண அளவு, குறைந்த அளவு மற்றும் சாதாரண அளவை விடவும் சற்று அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி அடைமழை பெய்து வருகிறது. எனினும் அதிகமான வெப்பநிலையும் நிலவுதாக திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்