கழுத்து சுருக்கமா? வாரம் ஒருமுறை இதை செய்யுங்கள்

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

தவறான உணவு பழக்கம், ஹார்மோன் பிரச்சனைகள், சூரிய கதிர்களின் தாக்கம் போன்றவை காரணமாக கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள் ஏற்படுகிறது.

கழுத்து சுருக்கத்தை போக்குவது எப்படி?
  • அன்னாசிப் பழத்தை கூழாக அரைத்து சாறு எடுத்து, அதை கழுத்து பகுதியில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து, நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்தால் போதும்.
  • ஒரு தேக்கரண்டி முட்டைக்கோஸ் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
  • இரவில் உறங்கும் முன் தினமும் ஆலிவ் ஆயிலுடன் கிளிசரினை கலந்து கழுத்து பகுதியில் தடவி வந்தால், கழுத்து சுருக்கம் மறையும்.
  • 4 பாதாம் பருப்பை அரைத்து, அதனுடன் பால் கலந்து பசை போல் குழைத்து, அதை கழுத்தில் தடவி, 1/2 மணி நேரம் கழித்து, உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.
  • தக்காளி பழத்தை கூழாக்கி அதனுடன் ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூளை கலந்து பசை போல் குழைத்து கழுத்து பகுதியில் தேய்த்து, உலந்த பின் துணியால் துடைக்க வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால் போதும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்