கோஹ்லியை அணியில் எடுக்க தயங்கினாரா டோனி? வெடித்த சர்ச்சை

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

விராட் கோஹ்லியை இலங்கைக்கு எதிரான தொடரில் தெரிவு செய்ய டோனியும், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சீனிவாசனும் தயக்கம் காட்டினர் என்ற புகாருக்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் திலீப் வெங்கசர்க்கார் கடந்த கடந்த 2006-08 வரை இந்திய அணி தெரிவு குழு தலைவராக பதவி வகித்தார்.

அப்போது, இலங்கையில் நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில் கோஹ்லியை தெரிவு செய்வதற்கு டோனியும், சீனிவாசனும் எதிர்த்ததாகவும், அதற்காக தன்னை பதவி நீக்கம் செய்தனர் எனவும் வெங்சர்க்கார் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனிவாசன், ஒரு கிரிக்கெட் வீரர் இவ்வாறு பேசுவது நன்றாகவே இல்லை, அணித்தெரிவு விவகாரங்களில் நான் தலையிடவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்