தோல்விக்கு இதுவே காரணம்: இலங்கை அணித் தலைவர் குமுறல்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவுடனான நேற்றைய போட்டியில் இலங்கை தோல்வியடைய முக்கிய காரணங்கள் குறித்து அணித்தலைவர் பெரேரா பேசியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திர தின கிண்ண டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை- இந்திய அணிகள் மோதியது.

இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணித் தலைவர் திசர பெரேரா, குசல் மெண்டீஸ் 15-வது ஓவரில் 55 ஓட்டங்களில் அவுட்டானது தான் ஆட்டத்தில் திரும்புமுனையாக அமைந்துவிட்டது.

அவர் களத்தில் இருந்திருந்திருந்தால் மேலும் ஓட்டங்களை குவித்திருக்க முடியும்.

இதே போல நடுவில் வந்த துடுப்பாட்ட வீரர்கள் உட்பட யாரும் திட்டமிட்டபடி சிறப்பாக விளையாடவில்லை, இதெல்லாம் சேர்ந்தே நாங்கள் தோல்வியடைய காரணமாக அமைந்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்