மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

டி20 போட்டிகளில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை கே.எல்.விஜய் படைத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல் ராகுல் 17 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

ராகுல் அவுட்டான விதம் அவருக்கு ஒரு மோசமான சாதனையை படைக்க உதவியிருக்கிறது.

அதாவது இலங்கையின் ஜீவன் மெண்டீஸ் பந்தை அடிக்க முயன்ற போது, ராகுல் கால் ஸ்டெம்பில் பட அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

இதன்மூலம் டி20 போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற புதிய மோசமான சாதனைக்கு ராகுல் சொந்தக்காரராகியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்