அறிவோம் ஆங்கிலம்: Principle மற்றும் Principal வார்த்தைகளுக்குள் வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com
Principle: பெயர்ச்சொல்

Principle என்பதை தமிழில் அடிப்படை உண்மை, கொள்கை அல்லது ஆட்சி ஆளுமை சம்மந்தமான வாக்கியங்களில் பயன்படுத்தலாம்.

அவர் ஒரு கொள்கையுடையவராக திகழ்கிறார், அந்த மதத்தின் கொள்கைகளுடன் நான் உடன்படவில்லை போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:

He was a man of principle and good to his word.

There exist certain fundamental principles of human rights.

I do not agree with the principles of that religion.

Principal: இது பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல் என இருவகையாக பயன்படுத்தப்படும்.

Principal என்பது பெயர்ச்சொல்லில் தலைமை பொறுப்பு என்பதையும், உரிச்சொல்லில் முக்கியம் என்பதையும் குறிக்கும்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார், பூமியின் மேற்பரப்பில் உள்ள முக்கிய உறுப்பு ஆக்ஸிஜன் ஆகும் போன்ற வாக்கியங்களில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு:

This only applies to the principal cities in the state.

The principal of the school is retiring this year.

Mary was the principal in the television series for 10 years.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்