நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ வெளியானதால் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
1674Shares
1674Shares
lankasrimarket.com

நடிகை சஞ்சனாவின் நிர்வாண வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தண்டுபாளையயா 2 என்ற படத்தில் அவர் சிறையில் இருப்பது போன்றும் அவரை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

தண்டுபாளையா–2 படத்திற்காக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அதில், நடிகை சஞ்சனா நடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது, நடிகை சஞ்சனா நிர்வாணமாக நடித்திருப்பது போன்ற சில காட்சிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அப்படியிருக்கையில், எப்படி இந்த காட்சிகள் வெளியானது என்று தெரியவில்லை என நடிகை சஞ்சனா கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் ஆந்திராவில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றி இன்னும் 2 நாட்களில் முழு விபரங்களை தெரிவிப்பேன் என்று சஞ்சனா கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த வீடியோ காட்சிகள் வெளியானதற்கு படக்குழுவினரே காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால், உரிய விளக்கம் அளிக்கும்படி படக்குழுவினருக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments