எந்த நடிகரும் முறையாக சம்பாதிக்கவில்லை: அஜித் தான் முறையாக வரி கட்டுகிறார்

Report Print Santhan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

தமிழ்நாட்டில் நடிகர் அஜித்தை தவிர வேறு யாரும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். கலந்து கொண்ட அவர் கட்சி தொடங்க நினைக்கும் சினிமா நடிகர்கள் யாருமே நல்லவர்கள் கிடையாது.

இவர்கள் நாட்டுக்கு வரி கட்டாமல் பணத்தை பதுக்குகிறார்கள். இவர்கள் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் எந்த நடிகரும் முறையாக சம்பாதிக்கவில்லை, எனக்கு தெரிந்து நடிகர்களில் அஜித் ஒருவர் மட்டுமே முறையாக வரியை செலுத்துகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்