ஐஸ்வர்யா ராயை புறக்கணித்த அமிதாப் பச்சன்: ரசிகர்களின் கோபத்தால் வெடித்த சர்ச்சை

Report Print Harishan in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியிருந்த மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஐஸ்வர்யா ராய் விடுபட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், தனது ட்விட்டரில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

அதில் தனது மனைவி ஜெயா, மகள் ஸ்வேதா, பேத்திகள் ஆராத்யா, நவ்யா ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தது. ஆனால் மருமகள் ஐஸ்வர்யாவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை அமிதாப்புக்கு எதிராக தெரிவித்துள்ளனர்.

அதில் உணர்ச்சிவசமடைந்த ஒரு ரசிகர், “ஐஸ்வர்யா திறமையான நடிகை, மகள், தாய், சகோதரி, மனைவி, முக்கியமாக ஒரு பெண்” என மிக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மருமகள் மகளாக முடியாது என தெரியும். ஆனால் மிகப்பெரிய பிரபலமாகிய நீங்களே இப்படி யோசிக்கிறீர்களே அமித்ஜீ என ஒரு ரசிகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமிதாப் குடும்பத்தில் விரிசல்கள் இருப்பதாக தகவல்கள் பரவிவரும் நிலையில் அவரின் இந்த ட்வீட் அதை உறுதி செய்வதாக பலர் கூறி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்