ஒரே நாளில் பில்லியன்களை இழந்த உலகின் முன்னணி செல்வந்தர்கள்

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் உலகின் முன்னணி 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு சுமார் 93 பில்லியன் டொலர் வரை இறக்கத்தைக் கண்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகின் முன்னணி 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 93 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

குறிப்பாக உலகின் முதல் பணக்காரராகத் திகழும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் 5.3 பில்லியன் டொலர் சரிவைக் கண்டுள்ளது. பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபட் சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டொலர் சரிவைக் கண்டுள்ளது.

மட்டுமின்றி உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டொலர் சரிவைக் கண்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டொலர் சரிவைக் கண்டுள்ளது.

மேலும் குறிப்பிடத்தக்க 20 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் 1 பில்லியன் டொலர் வரை சரிவைக் கண்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் நவம்பர் முதல் சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது மற்றும் கடன் விகிதங்கள் உயர்ந்தது போன்ற காரணங்களே இந்தப் பெரும் சரிவுக்குக் காரணமாகும் என்று தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரும் 500 பணக்காரர்களின் தினசரி சொத்து மதிப்பு ஏற்ற இறக்கங்களை புளூம்பெர்க் கணக்கிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்