சாப்பிட்ட பின்பு தப்பித் தவறி கூட இதை செய்திடாதீங்க!

Report Print Printha in உணவு
1544Shares
1544Shares
lankasrimarket.com

உணவு சாப்பிட்ட பின்பு அல்லது முன்பு சில விடயங்களை உடனே செய்வதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதுடன், உடலின் ஆரேக்கியமும் குறைந்துவிடும்.

சாப்பிட்ட பின் செய்யக் கூடாத விடயங்கள்?

  • உணவு சாப்பிட்டவுடனே பழங்களையும் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும்.

  • உணவு சாப்பிடும் போதும், சாப்பிட்டு சில நிமிடங்களுக்குள் தண்ணீர் குடிக்கவே கூடாது. நாம் சாப்பிட்ட உணவு ஜீரணித்த பின்பு தண்ணீர் குடிக்கலாம்.

  • உணவு சாப்பிட்டவுடன் டீ குடிக்கவும் கூடாது. ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானக் கோளாறை உண்டாக்கிவிடும்.

  • உணவு சாப்பிட்ட பிறகு பேண்ட் பெல்ட்டுகளை தளர்த்தி விடக் கூடாது. ஏனெனில் குடலை வளைத்து தடுக்க வாய்ப்புள்ளது.

  • உணவு சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது, ஏனெனில் வயிற்றுக்கு செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும், செரிமான உறுப்புகள் பாதிப்படையலாம்.

  • சாப்பிட்ட உடனேயே உறங்குவது, ஓடுவது, வேகமாக நடப்பது, ஓய்வு எடுப்பது ஆகியவை கூடாது. பகல் உணவு சாப்பிட்டதும் அரை மணி நேரம் சாய்வாக உட்கார்ந்து ஓய்வு எடுத்த பின் வழக்கமான வேலைகளை செய்யலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்