விமான நிலையத்துக்கு ரொனால்டோ பெயர்! இணையத்தில் கேலிக்குள்ளாகும் ரொனால்டோ

Report Print Basu in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில் அவர் பிறந்த ஊரான மடீராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக யூரோ சாம்பியன் பட்டத்தை வென்றது போர்த்துக்கல்.

இதன் காரணமாக ரொனால்டோவை கௌரவிக்கும் வகையில் அவர் பிறந்த மடீராவின் பஞ்சால் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துக்கொண்ட ரொனால்டோ, விமான நிலையத்தில் தனது வெண்கல சிலையை திறந்து வைத்தார். மேலும், அவர் பேசியதாவது, விமான நிலையத்திற்கு எனது பெயர் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது என குறிப்பிட்டார்.

எனினும், சமூக வலைதளங்களில் பலர் ரொனால்டோவின் வெண்கல சிலையை பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments