பிரான்சில் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்: ஜனாதிபதி அறிவிப்பு

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் நாடாளுமன்ற எம்.பி-க்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.

பிரான்சின் Versailles Palace-ல் இரு அவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது பேசிய ஜனாதிபதி, தேர்தல் வாக்குறுதியின் போது நாடாளுமன்றத்தில் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தேன்.

முதல் நடவடிக்கையாக எம்.பிக்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிட்டுள்ளேன், விகிதாசார அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் முறை மூலம் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இதுதொடர்பான சட்டத்திருத்தம் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும், ஒருவேளை நிறைவேற்றப்படாத பட்சத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்சில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை நீக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments