ஹொட்டேல் நீச்சல் குளத்தில் குளித்த பெண்ணுக்கு அபராதம்: காரணம் இதுதான்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
408Shares
408Shares
lankasrimarket.com

பிரான்சில் ஹொட்டேல் நீச்சல் குளத்தில் burkini உடையில் குளித்த பெண்ணுக்கு அபராதம் விதித்ததுடன் குளிக்கவும் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Marseille பகுதியில் இஸ்லாமிய தம்பதி ஒன்று விடுமுறையை கழிக்கும் வகையில் ஹொட்டேல் ஒன்றில் தங்கியிருந்தது.

சம்பவத்தன்று ஹொட்டேலில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குறித்த பெண் burkini உடையில் குளித்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த அந்த ஹொட்டேல் ஊழியர்கள் உடனடியாக அந்த பெண்ணைத் தவிர எஞ்சியவர்களை அந்த குளத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் காரணம் புரியாமல் திணறியுள்ளார். பின்னர் தமது கணவரிடம் வினவியபோது, அந்த ஹொட்டேலின் உரிமையாளர் தொடர்பு கொண்டதாகவும், இனிமுதல் அந்த ஹொட்டேலில் தங்கும் காலம் நீச்சல் குளத்தை பயன்படுத்த வேண்டாம் என நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குறிப்பிட்ட நீச்சல் குளத்தை சுத்தப்படுத்தும் பொருட்டு 440 பவுண்ட் அபராதமும் விதித்துள்ளனர். ஆனால் குறித்த தொகையை தங்களால் வழங்க முடியாது என கூறிய தம்பதிகளிடம் அனுமதி பெறாமல் அவர்களது வங்கி கணக்கில் இருந்து அந்த ஹொட்டேல் நிர்வாகி குறித்த தொகையை எடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தங்களது அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய அந்த தம்பதி, burkini உடை மீது இத்துணை வெறுப்பு பாராட்டுவது தங்களது உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்றனர்.

Algarve பகுதியில் இதேபோன்று burkini உடையில் குளித்த பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளையும் வெளியேற்றி அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்