மாணவி மீது காதல் கொண்ட ஆசிரியர்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்சின் 14 வயது பள்ளி மாணவியை காதலித்த ஆசிரியருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சின் Fontainebleau பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதே பள்ளியில் பயிலும் 14 வயது மாணவியை ஆசிரியர் காதலித்து வந்ததாகவும், ஒரு வருடமாக உடல் ரீதியான தொடர்பில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நேற்று இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்த போது, குற்றவாளிக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டதுடன் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பணியில் ஈடுபட தடை விதித்தார்.

ஆசிரியருக்கு தண்டனை கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும், இது குறைந்தபட்சமானது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் மன உளைச்சலால் தன் மகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் நீதிமன்றத்தில் இருந்து சிரித்தபடியே வெளியில் வந்தது ஆத்திரமூட்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்