மனைவி குறித்து காதல் ரசம் சொட்ட நாவல் எழுதிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மனைவி பிரிஜ்ஜிட் குறித்த சுயசரிதை புத்தகம் மூலம் மேக்ரான் இளம் வயதில் மனைவி குறித்து காதல் ரசம் சொட்ட நாவல் எழுதியது தெரியவந்துள்ளது.

Brigitte Macron, l'affranchie என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் வரும் 17-ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

மேக்ரான் மனைவி பிரிஜ்ஜிட் அவரை விட 24 வயது அதிகமானவர் ஆவார். பிரிஜ்ஜிட் நாடக ஆசிரியையாக இருந்த பள்ளியில் தான் மேக்ரான் படித்தார்.

இந்நிலையில் பெயர் வெளியிடாத மேக்ரானுக்கு இளம் வயதிலிருந்தே தெரிந்த பெண்ணொருவர் மேக்ரான் தனது வருங்கால மனைவி பிரிஜ்ஜிட் குறித்து அப்போது காதல் ரசம் சொட்ட கிளர்ச்சியாக நாவலை எழுதியதாக கூறியுள்ளார்.

தட்டச்சரான அந்த பெண் கூறுகையில், 300 பக்க நாவலை எழுதிய மேக்ரான் என்னிடம் கொண்டு வந்து அதை தட்டச்சு முறையில் தயார் செய்து தர சொன்னார்.

மனதில் இருந்ததை அதில் மேக்ரான் கொட்டியிருந்தார். ஆனால் பிரிஜ்ஜிட் பெயரை நேரடியாக அதில் அவர் குறிப்பிடவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதியில் எல்லிசி அரண்மனை கருத்து கூற மறுத்துள்ளது. இது மட்டும் உண்மையானால் இது போன்ற துடுக்கான விடயத்தை செய்த முதல் ஜனாதிபதி மேக்ரானாக இருக்க மாட்டார்.

காரணம், பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி வலீரி கிஸ்கார்ட் கடந்த 2009-ல் வெளியிட்ட நாவலில் டயானா மீதான தனது ஈர்ப்பு குறித்து எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்