பிரான்சில் நரசிம்ம சிலைக்குள் ஒருவாரம் அமர்ந்திருந்து சாதனை படைத்த நபர்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆப்ரகாம் போன்சிவெல். சாகச கலைஞரான இவர் தலைநகர் பாரிசில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3 புள்ளி 2 மீற்றர் உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒரு வார காலம் அமர்ந்துள்ளார்.

அதில் அமர்ந்திருந்த இவர், தினந்தோறும் 20 லிட்டர் தண்ணீரும், வறுத்த இறைச்சையும் உண்டு வந்துள்ளார்.

சுமார் ஒருவார காலம் சிலைக்குள்ளேயே இரவும், பகலும் அமர்ந்திருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியே வந்தார்.

இதன் மூலம் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்த நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஒரு பாறைக்குள்ளும், 2014-ஆம் ஆண்டில் கரடி வடிவ சிலைக்குள் அமர்ந்தும் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்