பிரான்சில் நள்ளிரவில் நடந்து சென்ற நபருக்கு நேரந்த துயரம்: வாயை உடைத்து பிடுங்கிச் சென்ற கொள்ளையர்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
389Shares
389Shares
lankasrimarket.com

பிரான்சில் நடந்து சென்ற நபரை மர்மநபர்கள் சிலர் தாக்கி அவர் வாய்க்குள் இருந்த தங்கப்பற்களை பிடுங்கிச் சென்றுள்ளனர்.

பிரான்சின் Aubervilliers பகுதியில் கடந்த ஜுன் மாதம் 29-ஆம் திகதி நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 12 மணியளவில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க நபர் தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை சுற்றி வளைத்த கொள்ளை கும்பல் அவரிடமிருந்த செல்போனை முதலில் திருடியுள்ளது.

தன் பின் வாயில் தங்கப்பல் கட்டியிருப்பதை அறிந்தவுடன் வாயை உடைத்து வாயின் உள்ளே இருந்த தங்கப்பற்களை பிடுங்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிப்புக்குள்ளான நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அவரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனவும் செல்போன், நான்கு தங்கப்பற்களை திருடிச் சென்றுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்