ஜேர்மனியில் நாடாளுமன்ற தேர்தல்: சான்சலர் வெளியிட்ட துணிச்சலான அறிவிப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அகதிகளை அதிகளவில் அனுமதித்தற்கு வருந்தவில்லை எனவும் இந்நடவடிக்கை மேலும் தொடரும் எனவும் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.

ஜேர்மனியில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதையை சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் போட்டியிடுகிறார்.

புகலிடம் கோரி வருபவர்களுக்கு ஜேர்மன் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என கடந்த 2015-ம் ஆண்டு சான்சலர் அறிவித்தார்.

சான்சலர் கூறியதை போலவே 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்களை தனது நாட்டிற்குள் சான்சலர் அனுமதித்துள்ளார்.

பிற ஐரோப்பிய நாடுகளை விட அதிகளவில் அகதிகளை அனுமதிப்பதால் அவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதே சமயம், அதிகளவில் அகதிகளை அனுமதிப்பதால் உள்நாட்டில் அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ஜேர்மனியில் அளவுக்கு அதிகமாக அகதிகளை அனுமதித்தற்காக வருந்தவில்லை. எதிர்வரும் தேர்தலுக்கு பின்னரும் இந்நடவடிக்கை தொடரும்.

பிற நாடுகளை போல் அகதிகளை நிராகரிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு புகலிடம் அளிக்க முயற்சி மேற்கொள்வதற்காக பெருமை கொள்கிறேன்’ என சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்