தினமும் Half Boil முட்டை சாப்பிடலாமா?

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com

முட்டையில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் நிறைத்துள்ளது.

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடின், ஜீ ஜான்தின் ஊட்டச்சத்துக்கள் உள்ளது, புரதச்சத்துகளும் நிறைத்துள்ளது.

காலையில் எழுந்ததும் முட்டையை அப்படியே சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு, ஆனால் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது நல்லதல்ல.

சமைக்காத முட்டையை சாப்பிடும் போது ஒரு சிலருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடலாம், பாலில் கலந்து குடிக்கும் போது வயிற்று உப்புசம் ஏற்படலாம்.

தொடர்ந்து வேக வைக்காத முட்டையை சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

சிலருக்கு வாயுத்தொல்லை ஏற்படலாம், ஒரு சிலநேரங்களில் முட்டையில் உள்ள சல்மோனில்லா என்று பக்டீரியாவால் வாந்தி, உடலில் நீர் வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படும்.

அரைவேக்காட்டு முட்டையை கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்