16 வயது சிறுமிக்கு நேர்ந்த அநியாயம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

டெல்லியில் 16 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி சிவப்பு விளக்கு பகுதியில் விற்பனை செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேற்கு டெல்லியை சேர்ந்த சுமதி என்ற சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பன்னா லால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இவர், ஒரு நாள் அவரை பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர், அதை வைத்து சிறுமியை மிரட்டத் தொடங்கினார். கடந்த டிசம்பர் 23ம் திகதி சுமதியை அவரது இடத்துக்கு வரவழைத்த பன்னா, அவர் முகத்தில் ஒரு துணியை வைத்ததில், சுமதி மயங்கியுள்ளார். பிறகு என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை.

இதையடுத்து சுமதியை நண்பர்களுடன் கடத்திச் சென்ற பன்னா, உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் பாலியல் தொழிலுக்காக விற்றுவிற்றார். அங்கிருந்து பல முறை சுமதி தப்பிக்க நினைத்தார். ஆனால் அவரால் முடியவில்லை.

இந்நிலையில் அங்குள்ள சிலரின் உதவியோடு நேற்று தப்பிய அவர், பொலிசாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி சோதனை செய்ததில், அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

தற்போது அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பன்னாவை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments