போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ராணா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

நடிகர் ராணாவுக்கும் அவரது சகோதரர் அபிராமுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிசார் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி ஆந்திர உலகில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதுபற்றி அதிர்ச்சியடைந்துள்ள ராணாவின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, ‘போதைப் பொருள் விவகாரத்தில் என் மகன்களை சம்மந்தப்படுத்துவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேவையில்லாமல் என் மகன்களை இதில் தொடர்படுத்தி அவர்களின் பெயரை கெடுக்க சிலர் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசில் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments