1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு பரிசினை வென்ற நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட சோறு சாப்பிடும் போட்டியில் 1 மணி நேரத்தில் 2.5 கிலோ சோறு சாப்பிட்டு நபர் ஒருவர் 5001 பரிசினை பெற்றுள்ளார்.

உள்ளூர் கிளப் ஒன்றின் சார்பாக சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, இதில் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் 1 மணி நேரத்திற்குள் 2.5 கிலோ சோறு சாப்பிட வேண்டும்.

சோறுடன் சேர்த்து மோர்க்குழம்பு, ஊறுகாய் இவர்களுக்கு பரிமாறப்பட்டது, இதில், KH Naseer என்பவர் 30 நிமிடங்களுக்குள் 2.5 கிலோ அரிசி சாப்பிட்டு முதல் பரிசான ரூ.5001 தொகையை பெற்றார்.

இந்த போட்டியானது 2 ரவுண்டாக வைக்கப்படும், முதலில் ரவுண்டில் வெற்றிபெற்றவர்கள் இரண்டாவது ரவுண்டுக்கு செல்வார்கள், இந்த இரண்டாவது ரவுண்டில் வெற்றியாளர்கள் உறுதிசெய்யப்படுவார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்