தமிழக கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய பயணி

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தில் உள்ள கோவில் வாசல் ஒன்றில் அனைவரிடமும் பிச்சை எடுத்துக் கெண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24-ஆம் திகதி ரஷ்யாவைச் சேர்ந்த இவாஞ்சலின் என்பவர் இந்தியா வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க சென்னையிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.

advertisement

அங்கு கோவில்களை எல்லாம் பார்த்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட அவர், அங்கே அருகே இருக்கும் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்கு சென்றுள்ளார்.

ஆனால் ஏ.டி.எம்-மில் பணம் வரவில்லை, அதற்கு பதிலாக உங்கள் ரகசிய எண் முடுக்கப்பட்டுவிட்டதாக அவரது போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

இதனால் பெரிதும் மனவருத்தத்திற்குள்ளான, அவர் வேறு வழியின்றி அங்குள்ள குமரகோட்டம் கோவில் வாசலில் அமா்ந்து பிச்சை எடுக்கத் துவங்கிவிட்டார்.

அங்கு வந்த பக்தர்களிடம் அவர் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் உடனடியாக அங்கு விரைந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அவரின் பயண ஆவணங்களைச் சரிபார்த்ததில் அவை அனைத்தும் உண்மையாக இருந்ததால், பொலிசார் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்