அத்தையை கர்ப்பமாக்கி கொலை செய்த மருமகன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
2501Shares
2501Shares
lankasrimarket.com

மருமகனுடன் தவறான உறவு ஏற்பட்டு அத்தை கர்ப்பமாகிய நிலையில் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அத்தையை மருமகன் கொலை செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

கமலிஜீத் என்ற இளைஞருக்கு அமிதா கவுர் என்ற பெண் அத்தை முறையாவார். இந்நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதனால் அமிதா கர்ப்பமானார். அவர் வயிற்றில் நான்கு மாத கரு வளர்ந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள கமலிஜீத்தை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், நீங்கள் எனக்கு அத்தை முறையாவதால் உங்களை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது, நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என கமலிஜீத் கூறியுள்ளார்.

இதையடுத்து முதலில் அமிதா விஷம் குடித்த பின்னர் கமலிஜீத் விஷம் குடிக்க முடிவு செய்தார்.

அதன்படி அமிதா விஷம் குடித்து நினைவிழந்த நிலைக்கு சென்றார், ஆனால் கமலிஜீத் விஷம் குடிக்காமல் அமிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை அருகிலிருந்து காட்டு பகுதியில் போட்டுள்ளார்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் காட்டு பகுதியில் இருந்த அமிதாவின் சடலத்தை பொலிசார் கைப்பற்றி விட்டு தீவிர விசாரணைக்கு பின்னர் கமலிஜீத்தை கைது செய்துள்ளார்கள்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்