இவர் பாம்புகளின் காதலன்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

ஒடிசாவின் உதானி நுவாகோன் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா சந்திர கோச்சாயத், பாம்புகளின் நேசர் என அன்போடு அழைக்கப்படுகிறார்.

இதுவரை 5000க்கும் மேற்பட்ட பாம்புகளை பத்திரமாக பிடித்து விட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தில் பாம்புகள் வந்தால் கிருஷ்ணாவைத்தான் அழைப்பர்களாம், பாம்புகள் மட்டுமின்றி மான்கள், புலிகள், யானைகள், பறவைகள் என மற்ற விலங்குகளையும் மீட்டுள்ளார்.

காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளித்தும் வருகிறாராம், அவர் கூறுகையில், மிருகங்கள் இல்லையென்றால் காடுகள் இல்லை, காடுகள் இல்லையென்றால் மனிதர்கள் இல்லை, விலங்குகளை காப்பாற்றும் போது ஆத்ம திருப்தி கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்