நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம்: தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன்

Report Print Harishan in இந்தியா
878Shares
878Shares
lankasrimarket.com

தமிழகத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முற்பட்ட பொறியியல் மாணவர் தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கவுரவ் குமார்(வயது 19), வேலூரில் தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் ECE இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார்.

விடுமுறைக்காக சொந்த ஊரான ஈரோட்டுக்கு ரயில் மூலம் சென்ற கவுரவ், ரயில்வே ஜங்ஷனில் ரயில் நிற்பதற்கு முன்பாகவே இறங்கியுள்ளார்.

அப்போது ரயிலின் எதிர்திசையில் இறங்கியதால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து ரயிலின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத கவுரவ் உடன் பயணித்த பயணிகள், கவுரவின் உடலை பார்த்து கண்னீர் வடித்துச் சென்றது அனைவரின் நெஞ்சையும் உருக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்