ஜிமெயிலில் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதிலும் கூகுளின் ஜிமெயில் சேவைக்கு ஒரு தனி வரவேற்பு காணப்படுகின்றது.

இதற்கு இலகுவானதும், விரைவானதுமாகக் காணப்படுவதுடன் பல வசதிகளையும் கொண்டிருக்கின்றமையுமே காரணமாகும்.

advertisement

இவ்வாறான நிலையில் Smart Reply எனும் புதிய வசதி ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வசதியானது பரிந்துரைகள் (Suggestions) அடிப்படையில் செயற்படுகின்றது.

அதாவது பெறப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டிய பதிலை நாம் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் மிகவும் குறைவாகும்.

காரணம் பெறப்பட்ட மின்னஞ்சலிலுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு பதிலை தானாவே தட்டச்சு செய்து விடும்.

இதனால் மிகவும் விரைவான செயற்பாட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments