கத்தார் நாட்டுக்கு உணவு அனுப்பியது ஏன்?

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ளன.

இவற்றில் அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் செல்வதற்கான அனைத்து வழி போக்குவரத்தையும் மூடியுள்ளன.

குறிப்பாக கத்தார் நாட்டுடனான அனைத்து விமான போக்குவரத்து சேவைகளும் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் அந்நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்வதையும் தடை செய்துள்ளன.

இதன் காரணமாக கத்தார் வழியே செல்லும் விமான பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைக்க குவைத் மற்றும் துருக்கி முயற்சித்து வருகின்றது.

இதனிடையே ரம்ஜான் காலத்தில் திடீரென இப்படி புறக்கணிப்புக்கு உள்ளானதால், கத்தார் நாட்டில் உணவுப்பொருட்களுக்கு சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வளைகுடா நாடுகள் விதித்துள்ள பயணத் தடையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கத்தாருக்கு, ஒரு விமானத்தில் உணவுப் பொருட்களை அனுப்பியுள்ளதாக மொராக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மனிதாபிமான அடைப்படையில் செய்யப்பட்டது என்றும் கத்தாருக்கு பயங்கரவாதத்துடன் இருப்பதாக கூறப்படும் தொடர்புகள் குறித்த அரசியல் சரச்சையுடன் இது தொடர்பில்லாதது என்று மொராக்கோவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டுக்கு ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் சுமார் 440 டன் எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களை மனிதநேய அடிப்படையில் ஈரான் அனுப்பியுள்ளது.

கத்தாரில் உணவு தட்டுப்பாடு நீங்கும் வரை உணவுப்பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் எனவும் ஈரான் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments