அறிமுகமாகின்றது Samsung Galaxy S9: உத்தியோகபூர்வ தகவல் வெளியானது

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

சாம்சுங் நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S9 மற்றும் Galaxy S9 Plus ஆகியன பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் அறிமுகத்தினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதாவது அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எனினும் எப்போதிலிருந்து விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இதேவேளை இக் கைப்பேசிகளில் பிரதான நினைவகமாக 6GB RAM உட்பட 64GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டிருக்கும்.

சில சமயங்களில் சேமிப்பு நினைவகத்தினை 512GB வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் Galaxy S9 12 மெகாபிக்சல்களை உடைய தனியான பிரதான கமெராவையும், Galaxy S9 Plus ஆனது தலா 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் கமெராக்களையும் கொண்டிருக்கும்.

மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்