தவறான செய்திகளை பரப்பினால் ரூ.16 லட்சம் அபராதம்: வருகிறது புதிய சட்டம்?

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இத்தாலி நாட்டில் இணையத்தளம் மூலமாக போலியான செய்திகளை பரப்பும் செய்தி நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலி நாட்டில் செய்தி தாள்களை தவிர்த்து இணையத்தளம் மூலமாக இயங்கும் ஊடகங்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இத்தாலி நாட்டின் Five Star Movement கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான Adele Gambaro என்பவர் தான் இந்த புதிய மசோதாவை அரசாங்கத்திடம் தாக்கல் செய்துள்ளார்.

அதில், போலியான செய்திகளை வெளியிடுதல், தனிநபர் மீதான வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரத்தில் ஈடுப்படுவது, ஒருதலை பட்சமாக செய்திகளை வெளியிடுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தவறான செய்திகளை பரப்பியதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்காதவர்களுக்கு இந்த தண்டனை பொருந்தும்.

தவறான செய்திகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஜனநாயகத்திற்கு எதிரான நிலைப்பாடு ஏற்படுவதால் இச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என Adele Gambaro வலியுறுத்தியுள்ளார்.

இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், போலியான செய்தி வெளியிட்ட தனிநபர் அல்லது இணையத்தள செய்தி நிறுவனத்திற்கு 10,000 யூரோ வரை(16,06,698 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், இந்த தவறுகள் மீண்டும் நிகழாதவாறு குற்றம் செய்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க வேண்டும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்துள்ள இந்த மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments