உதவிக்காக அழைத்த இரண்டு மாணவிகளை கற்பழித்த பொலிஸ் அதிகாரிகள்

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இத்தாலி நாட்டில் உதவிக்காக அழைத்த இரண்டு மாணவிகளை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் இருவர் கற்பழித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 19 மற்றும் 21 வயதான மாணவிகள் இருவர் இத்தாலியில் படிப்பதற்காக 8 மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ளனர்.

டஸ்கேனி மாகாணத்தில் உள்ள Florence நகரில் இருவரும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இருவரும் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, விருந்தின்போது நபர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டு அடிதடி நிகழ்ந்துள்ளது.

இத்தகராறை தடுத்து நிறுத்துவதற்காக பெண்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலை பெற்ற 6 பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று தகராறை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், 4 பொலிசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

எஞ்சிய 2 பொலிசார் அங்கிருந்த இரண்டு அமெரிக்க மாணவிகளை அழைத்து அவர்களது வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறியுள்ளனர்.

இரண்டு மாணவிகளும் பொலிசாரின் வாகனத்தில் ஏறுவது அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

பின்னர், மாணவிகள் இருவரும் தங்கியிருந்த வீட்டை அடைந்த பின்னர் இருவரையும் பொலிஸ் அதிகாரிகள் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மாணவிகள் இருவரும் தற்போது உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர், இப்புகாரை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய உயர் பொலிஸ் அதிகாரிகள் புகார் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்