அமேசான் பழங்குடியினர் 20 பேர் படுகொலை: தங்க சுரங்கத் தொழிலாளர்கள் வெறிச் செயல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

அமேசான் பழங்குடியின மக்கள் 20 பேரை பிரேசில் தங்க சுரங்கத் தொழிலாளர்கள் சிலர் கொடூரமாக தாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியன் எல்லையில் அமைந்துள்ள அமேசான் பழங்குடியின குடியிருப்பில் புகுந்து பிரேசில் தங்க சுரங்கத் தொழிலாளர்கள் இக் கொடுர தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

advertisement

இதில் 10 பழங்குடி மக்களின் கை கால்களை துண்டித்து கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த பின்னர் ஆற்றில் தள்ளியுள்ளனர்.

பழங்குடியின மக்களின் குடியிருப்பு பகுதியை குறித்த சுரங்கத் தொழிலாளர்கள் ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும், இதில் இரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி நடந்த சம்பவத்தை சுரங்கத் தொழிலாளர்கள் நகரத்தில் உள்ள மதுபான விடுதியில் சென்று அனைவருக்கும் தெரியப்படுத்தி கொண்டாடியுள்ளனர்.

மேலும், பழங்குடியினர் பயன்படுத்தி வந்த சில முக்கிய பொருட்களையும் இவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பழங்குடியின மக்களை கொலை செய்திருக்காவிட்டால் அவர்கள் தங்களை கொன்றிருப்பார்கள் எனவும் அந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது பிரேசில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்துன் தெரிவித்த சமூக ஆர்வலர் Sarah Shenker, இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையானது நடந்த சம்பவங்களை உறுத்திப்படுத்தும் என்றால் இது பிரேசில் அரசாங்கத்தால் நடத்தப்படும் இன்னொரு இன அழிப்பு படுகொலையாகவே கருதப்படும் என்றார்.

அமேசான் பழங்குடியின மக்கள் வாழும் குறித்த பகுதியானது மொத்தம் 21 மில்லியன் ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். இதில் 14 பழங்குடி குழுக்கள் குடியிருந்து வருவதாக குறப்படுகிறது. இவர் எவரும் வெளிவட்டார தொடர்புகள் ஏதுமின்றி வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்