அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தால் அமெரிக்கா பெரும் துயரத்தை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது.

தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருவதால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுஆயுத வல்லரசு நாடாக வடகொரியா உருவாகியுள்ளதை அமெரிக்கா விரும்பவில்லை.

தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம், அமெரிக்காவை அழிக்கவும் தயங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவதன் மூலமே தீர்வு காண முடியும் என ரஷ்யாவும், சீனாவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது..

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்