முக்கிய திட்டத்தினை கைவிட்டது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
65Shares
65Shares
lankasrimarket.com

சமூக வலைத்தளத்தினை தாண்டி பல்வேறு தொழில்நுட்ப திட்டங்களையும் பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இதேபோன்று பறக்கும் ட்ரோன் வகை விமானங்களைப் பயன்படுத்தி இணைய சேவையினை வழங்கும் திட்டத்தினையும் முன்னெடுத்து வந்தது.

இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த திட்டத்தினை கைவிடவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Aquila எனப் பெயரிடப்பட்ட இத் திட்டமானது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன் ஊடாக தொலைதூர கிராமங்களுக்கும் இடையறா இணைய வசதியினை வழங்குவது பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.

இதேபோன்று கூகுள் நிறுவனம் கூகுள் லூன் எனும் திட்டத்தின் ஊடாக தொலைதூரப் பிரதேசங்களுக்கு இணைய இணைப்ப வழங்க முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்