கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சல்: குழந்தையை பாதிக்குமா?

Report Print Printha in கர்ப்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் வயிற்றில் உள்ள குழந்தையை பாதிப்பதில்லை.

ஆனால் அதுவே பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அது குழந்தையை பாதிக்கும்.

பன்றிக் காய்ச்சல்

பன்றிக்காய்ச்சல் இன்ஃபுளுயன்சா A (H1N1) எனும் வைரஸ் கிருமி மூலம் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் கர்ப்பிணிகளை பாதித்தால், அது காய்ச்சலை தீவிரமாக்கி, மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எனவே கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களுக்கு இந்த பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டால், அது கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருந்தால், குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்பட கூட வாய்ப்புள்ளது.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

பன்றிக்காய்ச்சலை தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி (Trivalent inactivated vaccine - TIV) பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை பெண்கள் கர்ப்பம் அடைவதற்கும் முன் மற்றும் பின் போட்டுக் கொள்ளலாம்.

ஆனால் இந்த ஊசி ஒரு ஆண்டிற்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும். எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த தடுப்பூசியை மறக்காமல் போட்டுக் கொண்டால், பன்றிக் காய்ச்சலே வராது.

டெங்குக் காய்ச்சல்

டெங்கு எனும் வைரஸ் கிருமிகள் மூலம் இந்த டெங்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டால், ஆபத்துகள் அதிகமாக இருக்கும்.

கர்பிணி பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், குறைப்பிரசவம், எடை குறைவாக குழந்தை பிறப்பது அல்லது குழந்தை பிறந்தவுடன் டெங்கு காய்ச்சல் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இதனால் கர்ப்பிணிகளுக்கு அதிக ரத்தப்போக்கு, வயிறு மற்றும் நுரையீரலில் அதிக நீர் கோர்த்துக் கொள்ளுதல், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள், குறைவான ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், உயிருக்கே ஆபத்தாகலாம்.

டெங்குக் காய்ச்சலை தடுப்பது எப்படி?

தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பரிசோதனை, டெங்கு காய்ச்சல் மூலம் ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்கான சிகிச்சைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments