கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம்! காரணம் என்ன?

Report Print Raju Raju in தெற்காசியா
577Shares
577Shares
lankasrimarket.com

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண். விவசாயியான இவருக்கு அகிலேஷ் (13) என்னும் மகன் உள்ளார்.

அகிலேஷ்க்கு பத்து வயதிலிருந்து விசித்திர நோய் இருந்து வருகிறது.

அதாவது அவன் கண், காது, வாய், கால், தலைமுடி போன்ற இடங்களிலிருந்து இரத்தம் தினம் 1லிருந்து பத்து முறை வடிகிறது.

Haemolacria என்னும் உடலிலிருந்து நீர் வரும் நோய்க்கு சம்மந்தமான நோயாக இது கருதப்படுகிறது.

இது குறித்து அகிலேஷ் கூறுகையில், இப்படி தினமும் ஒன்றிலிருந்து பத்து முறை என் உடலில் நடக்கிறது. இது நடக்கும் சமயத்தில் என் உடல் சோர்வடைந்து தலைவலி ஏற்படும் என அவர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் தந்தை அருண் கூறுகையில், என் மகனை இந்தியாவில் உள்ள பல முக்கிய மருத்துவர்களிடம் காட்டி விட்டோம்.

ஆனால் யாராலயும் இது என்ன நோய் என கண்டுப்பிடிக்கவில்லை. சில நாட்களாக அவன் சிறுநீரிலும் இரத்தம் வருகிறது.

என் மகனை நினைத்தால் எனக்கு கவலையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும், மருத்துவ கழகம் மூலம் உலக நாடுகளில் உள்ள மருத்துவர்கள் தான் தன் மகனுக்கு வந்துள்ள நோய்க்கு தீர்வு காண வேண்டும் என அருண் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments